Friday, December 27, 2019


பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறள் உரைச்சுருக்கம்

முதல் பதிப்புக்கான என்னுரை

தமிழ் இலக்கியங்களிள் மீதும் தமிழ்ப் புலவர்களின் மீதும் வெறுப்புக் கொண்டிருந்த தந்தை பெரியார், திருக்குறளின் மீது மட்டும் பற்றுக் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார். கடவுள் வாழ்த்துக்கு அறிவுபூர்வமான உரை எழுதியவரும் தந்தை பெரியாரே.

பேரறிவாளன் வள்ளுவனின் உள்ளத்தை அறிந்து உலகியல் நடை முறைக்கு ஏற்பவும் பகுத்தறிவுக்கு ஒத்த வகையிலும் உண்மை நெறியுடனும் பெரியார் வழிவந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், 85 திருக்குறளுக்கு குயில் இதழில் உரை எழுதி வந்தார்.

முனைவர் ச.சு.இளங்கோ அவர்கள் தொகுத்து வழங்கிய 'வள்ளுவர் உள்ளம்' என்ற ஆய்வு நூலையும் புதுச்சேரி செங்கமலத்தம்மையார் அவர்கள் தொகுத்த 'பாவேந்தர் பார்வையில் வள்ளுவம்' என்ற நூலிலிருந்தும் எளிமை ஒன்றேயே குறிக்கோளாகக் கொண்டு கருத்துச் சிதைவு ஏற்படாமல், சொற்களும் மாறாமால் என்னால் எளிமைப் படுததப்பட்டுள்ளது இந்நூல்.

தந்தை பெரியார் விரும்பிய இலக்கியப் பணியாக இதை நான் கருதியதால் இம்முயற்சியில் இறங்கினேன்.

தமிழ்ச்சான்றோர்கள் பொருத்தருள்க!

அன்புடன்
கவி
பெரியார் பட்டறை,சிதம்பரம்
25.2.2001

No comments:

Post a Comment