விருந்தோம்பல்
விருந்தினரைப் பேணுதல். உண்பித்தல் என்னாது ஓம்பல் என்றது. உண்பித்தலோடு அமையாது எதிர்கோடல். முகமலர்தல். அவர் விருப்பும் அறிதல் முதலியவும் குறித்தற்கு விருந்து . அன்பின் வழியது. ஆதலின் அன்புடைமைக்குப் பின் இது வைக்கப்பட்டது.
1. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
அறத்தின்கண் இருந்து பொருள் காத்து இல்லத்தின்கண் வாழ்ந்திருப்ப தெல்லாம் எதற்கு எனில், வரும் விருந்தினரைப் பேணி, உதவி செய்ய தன் பொருட்டே ஆகும்.
2. விருந்து புறத்ததுஆ தான்உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று.
தான் உண்ண இருப்பது, சாவாமைக்கு ஆதாரமான மருந்தே ஆயினும் வந்த விருந்தினர் ஒரு புறத்தே இருக்க அவரை விட்டுத் தானே உண்ணுமோர் பான்மையுடையதன்று.
3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
வந்த விருந்தினரை நாடோறும் பேணுவானது நல்வாழ்க்கையானது வருந்தி கேடுறுவது இல்லை. வருவார்க்கு ஊட்டலின் வளங்குறையாதென ஐய மறுத்தார் இப்பாட்டால்.
No comments:
Post a Comment