1. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
அரசன் தன் காத்தல் தொழிலைச் செவ்வனம் செய்யான் எனில், ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டுவந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும்.
நூல்மறப்பர் -தம் கொள்கையை விடுவர்.
ஆபயன் என்றால் (ஆன பயன்) அரசன் நல்லபடி ஆண்டுவந்த போது ஆனபயன் என்பது பொருள். (பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை முறையாக நடைபெறுதல்).
அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர்.
2. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
அரசன் முறை தவறாக நடப்பானாயின் நீர்த் தேக்கங்கள்(கவனிப்பாரற்று) சீர்கேடு அடையும் காரணத்தால், நீர்த்தேக்கங்களால் வானம் பெய்வதைத் தேக்கி வைக்க இயலாது.
தொண்டை நாட்டில் கேணியையும், கிணற்றையும் உறை என்றே சொல்லுதல் கருதத் தக்கது.
உறைகோடி - ஏரி, குளம் முதலியவை. ஒல்லாது - தேக்குதல் செய்ய மாட்டா.
மன்னவன் முறைதவறி ஆட்சி நடத்தினால் அதனால் முகில் பொழிதலைச் செய்யாதொழியும் எனின், முகில் அறிவுடையப் பொருளா?
No comments:
Post a Comment